Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பங்குச் சந்தை வீழ்ச்சியை விடப் பெரிய ஆபத்து

பங்குச் சந்தை வீழ்ச்சியை விடப் பெரிய ஆபத்து

“நாம் பார்க்க முடியாத அளவிலான மாபெரும் கடன் சுமை சந்தையில் மறைந்துள்ளது” என எஸ்&பி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், பங்குச் சந்தையில் 'ஏஐ குமிழி' உடைந்து வீழ்ச்சி ஏற்படும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. ஆனால், இதைவிட மிகப் பெரிய, கணிக்க முடியாத பெரும் கடனும், நிதி சார்ந்த ஆபத்தும் திரைக்குப் பின்னால் நிழல்போல தற்போது உருவெடுத்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படை உட்கட்டமைப்பை உருவாக்குவதற்காக, மைக்ரோசாப்ட், அமேசான், கூகுள் போன்ற முன்னணி பெருநிறுவனங்கள் மாபெரும் தரவு மையங்கள் மற்றும் அதிநவீன சிப்களுக்காக மலைக்க வைக்கும் தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன.

2030-ம் ஆண்டு வரை இந்த அதீத செலவீனங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் பிரம்மாண்ட உட்கட்டமைப்புக்கான நிதியானது மிகவும் சிக்கலான, ஒன்றோடொன்று தொடர்புடைய அமைப்புகளின் மூலம் திரட்டப்படுகிறது.

எனவே, பெருநிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இருப்புநிலைக் குறிப்புகளில் இந்த மாபெரும் கடன்கள் முழுமையாகக் காட்டப்படுவதில்லை. இதன் காரணமாக, கடன் தரமதிப்பீட்டு நிறுவனங்களால் சந்தையில் உள்ள இந்த மறைமுக முதலீட்டு அபாயங்களை முழுமையாகக் கணிக்க முடியாமல் திணறி வருகின்றன. “நாம் பார்க்க முடியாத அளவிலான மாபெரும் கடன் சுமை சந்தையில் மறைந்துள்ளது” என எஸ்&பி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உதாரணமாக, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டிற்கு 1 டிரில்லியன் டாலருக்கும் மேலான மறைமுக ஏஐ முதலீட்டு அபாயங்கள் உள்ளதாகச் சமீபத்திய ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. எதிர்காலத்தில் ஏஐ தொழில்நுட்பத்திற்கான தேவை எதிர்பாராதவிதமாகக் குறைந்தாலோ அல்லது முதலீட்டிற்கு ஏற்ப லாபம் ஈட்ட அதிக காலம் எடுத்தாலோ, பதுங்கியிருக்கும் இந்த 'மறைமுகக் கடன்' சுமை உடனடியாக வெடிக்கும். இது ஒட்டுமொத்த உலகளாவிய தொழில்நுட்பத் துறையிலும் சரிசெய்ய முடியாத மாபெரும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கிறது.

முந்தைய செய்தி
VFRYT தளத்தில் 50 மின்சார வாகனங்கள்
அடுத்த செய்தி
ரேவன்சா டெவலப்பர்ஸ் அம்பாசிடரானார் ரவி மோகன்

தொடர்புடைய செய்திகள்